சித்தீக் கடத்திய 52 கோடி ரூபா எங்கே :சீ.ஐ.டி விசாரணை

0
421

போதைப் பொருள் கடத்தல் மன்­ன­னான மொஹம்மட் சித்தீக் இலங்­கையில் போதைப் பொருள் வர்த்­தகம் ஊடாக உழைத்த சுமார் 52 கோடி ரூபா பணத்தை உண்­டியல் முறைமை ஊடாக டுபாய்க்கும் அங்­கி­ருந்து பாகிஸ்­தா­னுக்கும் கடத்­தி­யுள்­ளமை தொடர்­பி­லான ஆதா­ரங்கள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்­துள்­ளன.

அதன்­படி பாகிஸ்­தா­னுக்கு கடத்­தப்­பட்ட இந்தப் பணம் அங்­கி­ருந்து செயற்­படும் பயங்­க­ர­வாத அமைப்­பொன்றின் கைக­ளுக்கு சென்­றுள்­ளதா என்­பது குறித்து தீவிர விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு பிரிவு தெரி­விக்­கின்­றது.

இது தொடர்பில் கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டி­ய­வுக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு, அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. மொஹம்மட் சித்­தீக்கின் மின் அஞ்­சலை மையப்­ப­டுத்­திய தொடர்­பாடல் வலை­ய­மைப்பை ஆய்­வுக்கு உட்­ப­டுத்தும் போது, சித்தீக் பாகிஸ்­தானில் இருந்­த­வாறு இலங்­கையில் உள்ள தனது சகாக்கள் ஊடாக போதைப் பொருள் வர்த்­த­கத்தில் கிடைத்த 517,125,930 ரூபாவை உண்­டியல் முறை­யூ­டாக பாகிஸ்­தா­னுக்குள் வர­வ­ழைத்­துள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ள­தாக அந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

அதன்­படி ஹெரோயின் வர்த்­தகம் ஊடாக உழைக்­கப்­பட்ட பணம் டுபாய் ஊட­கவே பாகிஸ்­தா­னுக்குள் கடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் மொஹம்மட் சித்­தீக்­குக்கு எதி­ரான விசா­ர­ணை­களை தொடர்ந்து வரும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு, சித்­தீக்கும் அவர் மனைவியும் பணிப்­பா­ளர்­க­ளாக இருந்த கட்­டு­மான கம்­ப­னியின் வரு­மான வரி தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொள்­வ­தாக தெரி­விக்­கின்­றது.

போதைப் பொருள் ஊடாக சித்தீக் உழைத்த பணம் பரி­மாற்­றப்­பட்ட முறை­க­ளுக்கு மேல­தி­க­மாக அது செல­வி­டப்­பட்ட முறை, பயங்­க­ர­வா­தி­களின் கைகளுக்கு சென்றதா போன்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச உளவுப் பிரிவுகளின் தகவல்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளுக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

-Vidivelli-

LEAVE A REPLY