(Flash) காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் கடத்தல்; உதவிய அதிகாரியும் கைது

0
1580

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த நபருக்கு உதவி செய்ததாக தெரிவிக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையக குடிவரவு, குடியகல்வு அதிகாரி ஒருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கம் அறிவித்துள்ளது.

இதன்போது குறித்த நபரிடமிருந்து, 392 தங்க மாலைகள் மற்றும் 18 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Thinakaran)

LEAVE A REPLY