நல்லாட்சிக்கு வயது ஒன்று

0
98

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்று முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்ணிட்டு எதிர்வரும் 8ஆம் 9ஆம் திகதிகளில் ஜனாதிபதி அலுவலகம், பிரதம மந்திரி மற்றும் ஊடக அமைச்சும் இணைந்து பல்வேறு தேசிய நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளன. என ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க தெரிவித்தார்.

நேற்று (06) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ஜயந்த கருனாதிலக்க மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாளை (08) காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பொது மக்கள் தொடர்பு, நேரடியாக மக்கள் ஜனாதிபதியை தொடர்பு கொள்ளக்கூடிய அலுவலகம் திறந்து வைக்கப்படும்.

பி.பகல் 02.00-05.00 மணிக்கு மைத்திரி ஆட்சியில் ஒரு வருட நிகழ்வுகள் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமான தேசிய வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகாத்மா காந்தியின் பேரனும் முன்னாள் இலங்கையின் தென்ஆபிரிக்கா, இந்தியா பிராந்திய ஆளுனராக கடமையாற்றிய இந்திய உயர் ஸ்தாணிகர் கோபால் கிருஸ்னா காந்தி ஆகியோர்கள் விசேட உரை நிகழ்த்துவார்கள்.

ஜனவரி 09ஆம் திகதி மு.பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பினை ஸ்தாபித்தல் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உரையாற்றுவார்.

(அஷ்ரப் ஏ. சமத்)

LEAVE A REPLY