(Photos) காயப்பட்ட பெண் யானையை காப்பாற்ற துடித்த ஆண் யானை; வாகனேரி காட்டு பகுதியில் சம்பவம்

0
146

காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்டு காயப்பட்ட நிலையில் அந்த யானையை காப்பாற்றும் நோக்கில் ஆண் யானை மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து விட்ட சம்பவம் நேற்று முன்தினம் (05) வாகனேரி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

காயப்பட்ட பெண் யானை நான்கு வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என்றும் காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலனறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்து மருத்துவர்கள் வருகைதரவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கிரான் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயப்பட்ட யானையை காப்பாற்றும் நோக்கில் மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு கொண்டு வந்த ஆண் யானை அதன் அருகிலயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

(வாழைச்சேனை நிருபர்)

Elephant Vahaneri 1 Elephant Vahaneri 3 Elephant Vahaneri 4 Elephant Vahaneri 5 Elephant Vahaneri 6 Elephant Vahaneri 7 Elephant Vahaneri 8

LEAVE A REPLY