(Photos) மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
152

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையைத் தொடர்ந்து தாழ்நிலைப் பிரதேசங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தங்களது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலைப் பிரதேசங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதாகவும் மழை தொடரும் பட்சத்தில் நாளை இடம் பெயர்வுகள் ஏற்படலாம் என்றும் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.

வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர் ராகுலநாயகி தெரிவிக்கையில், எங்களது பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணிதாட்டமடு ஆகிய மூன்று கிராமங்களுக்குமான போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்யும் சந்தர்ப்பத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இடம் பெயரும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் பிரதேச செயலக அதிகாரிகள் தொடர்ந்தும் கடமையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.நௌபலிடம் வினவிய போது,, இன்று தொடர்ந்து பெய்த மழை காரணமாக மாலை 05.00 மணிவரை இடம் பெயர்வுகள் ஏதும் இடம் பெறவில்லை என்றும் காவத்தமுனை, மாஞ்சோலை, பதுரியாநகர், ஓட்டமாவடி, மீறாவோடை போன்ற கிராமங்களில் சில பகுதிகள் நீரிழ் மூழ்கி காணப்படுவதாகவும் மழை தொடரும் பட்சத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்குறிய வசதிகளை செய்வதற்கு எங்களது உத்தியோகத்தர்கள் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவிக்கையில், மாவடிச்சேனை,செம்மண்ஓடை, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் வீதிகள், பாடசாலைகள் என்பன நீரில் மூழ்கி காணப்படுவதுடன் வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுவதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு காணப்படுவதாகவும் இன்று மாலை 05.00 மணிவரை இடம் பெயர்வுகள் ஏதும் இடம் பெறவில்லை என்றும் மழை தொடரும் பட்சத்தில் இடம் பெயர்வுகள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

(வாழைச்சேனை நிருபர்)

1f1709e7-5bfc-4e01-8d80-16d377d3379c 4c099199-94f6-476a-8762-50e3a8436256 4f3191c3-26ba-4215-8af5-13c98d2fd1b6 6a23d6b5-83d2-47d9-a780-602993517aea 07b3a7d4-9135-45a7-a230-c47ed281e06b 68cb03f2-24f2-4e80-91ff-1e16e5d5bb58 b431dbb4-d77e-41cc-8cd1-8a5c70fc93ce c43c299f-0fdb-4a04-87d8-7ba0a567b321 d8bb7063-f97c-4bb2-b81d-e83b30d6d585 e5f03c3a-c6d6-46c4-abb1-343681a01b86

LEAVE A REPLY