கல்குடா கல்வி வலயத்தில் முதன் முறையாக மருத்துவ பீடத்திற்கு ஒரு மாணவி தெரிவு

0
386

கடந்தவாரம் வெளியாகிய கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் முதன் முறையாக மருத்துவ பீடத்திற்கு ஒரு மாணவி தெரிவாகி கற்ற பாடசாலைக்கும் தனது வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கல்குடா கல்வி வலயத்தில் பேத்தாளை விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் நாகேந்திரம் ராஜிதா என்ற மாணவியே 01 ஏ 02 பி (இராசனவியல் பாடத்தில் ஏ, பௌதீகம் மற்றும் உயிரியல் பாடத்தில் முறையே பி) சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 25வது இடத்தினையும் தீவு மட்டத்தில் 1163வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து முதன்முறையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி நாகேந்திரம் ராஜிதாவை கல்குடா வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா, உதவி வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா புலேந்திரகுமார், கல்லூரி அதிபர் ரீ.சந்திரலிங்கம் ஆகியோர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வாழைச்சேனை நிருபர்

484255b2-7069-4e9a-90f3-f76fb0cb17be b9545730-aaf9-4998-bb8c-28515b0f33de ba1e4b6e-8725-49a8-8e66-76371209ead9 dc17e418-d716-4e73-8475-a5686c15de83

LEAVE A REPLY