கல்முனை மக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

0
373

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்.

கல்மனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள சன நடமாட்டம் குறைவாக உள்ள உள்வீதிகளினால் பொதுமக்கள் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்கள் தங்க ஆபரணங்களை அபகரித்துச்செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துக்காணப்படுகின்றது.

இதனை தவிர்த்துக்கொள்வதற்காகவேண்டி குறிப்பாக பெண்கள் தனிமையாக உள்வீதிகளில் செல்லும்போது தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதனை குறைத்துக்கொள்ளுமாறும் அவ்வாறு அணிந்து செல்லூம்போது தங்க ஆபரணத்தினை உரிய முறையில் பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY