(Video) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு, காற்றுடன் சேர்ந்த மழை

0
243

Valaichenai Harbour 3கடந்த மூன்று மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 145.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

இந்த மழை வீழ்ச்சி இன்று (06) புதன்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 2.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணி வரை 58.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இன்று காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணி வரை 23.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மழையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றன.

இதனால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து செய்வதில் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

பலரின் வீடுகளுக்குள் வெள்ள நீர் ஏறியுள்ளதால் அவர்கள் உறவிணர் நண்பர்கள் வீடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இன்னும் இடம் பெயர்வுகள் தொடர்பில் விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே வேலை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காற்றுடன் சேர்ந்த மழையும் பெய்து கொண்டுள்ளது.இதனால் தாழ்நிலங்கள் நீரிழும் உயர்நிலங்கள் காற்றாலும் பாதிப்படையும் கால நிலை காணப்படுகிறது.

(முகம்மட் சஜீ)

LEAVE A REPLY