ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு ஊடகத்துறை பற்றிய பயிற்சி நெறி

0
352

அச்சு, இணையத்தளம் ஆகிய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு ஊடகத்துறை பற்றிய மூன்று நாள் பயிற்சி நெறி புதன்கிழமை கண்டி பொல்கொல்லையிலுள்ள கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் (Srilanka Press Institute) இப்பயிற்சிக்கான இணைப்பாளர் எம். சம்மாஸ் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ள இப்பயிற்சி நெறியில் புலனாய்வு ஊடகத்துறையின் பல்வேறு விடங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கில மொழியில் இடம்பெறும் இப்பயிற்சி நெறி சர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான தொம்ஸன் மன்றத்தின் (Thomson Foundation) வளவாளர் ஹெலென் ஸ்கொட்டினால் (Helen Scott) வழங்கப்படுகின்றது.

இலங்கையின் உள்ளுர் மற்றும் சர்வதேச இணையத்தளங்கள், மற்றும் அச்சு ஊடகங்களுக்காகப் பணியாற்றும் சுமார் 16 ஊடகவியலாளர்கள் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்றனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC00329 DSC00332 DSC00341 DSC00350

LEAVE A REPLY