மன்னாரில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
361

மன்னார் சின்னக்கடை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (06) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ரசிகா மலர்சாலைக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்தே குறித்த ஆணுடைய சடலம் இன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான பெனடிற் யூட் கோடிஸ்வரன் (வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிசார் மற்றும் வவுனியா தடயவியல் பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு பிள்ளையின் தகப்பனாகிய குறித்த நபர் கனடாவில் இருந்து மன்னாருக்கு வந்து கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்.

அவரது குடும்பத்தார் கனடாவில் வசித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் தனிப்பட முறையில் ஆங்கிலம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்கடை பிரதான வீதியில் அமைந்துள்ள சம்பவம் இடம் பெற்ற வீட்டில் வாடகை அறை ஒன்றில் வசித்து வந்தநிலையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண)

LEAVE A REPLY