வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதே நிலநடுக்கத்துக்கு காரணம்: ஜப்பான் தகவல்

0
302

வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அந்நாட்டு ராணுவம் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதே காரணம் என ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இது சாதாரண நிலநடுக்கம்தான் என வடகொரிய மக்கள் நம்பிவரும் நிலையில், வடகொரியா புதிதாக அணு குண்டை வெடித்து பரிசோதித்திருக்கலாம் என தென்கொரியா ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன. இதே சந்தேகத்தை ஜப்பானும் தற்போது எழுப்பியுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்துடன் கடந்தகால சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் வடகொரியா இன்று அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டிருக்கலாம் என கருத வாய்ப்புகள் உள்ளன. அங்குள்ள நிலவரத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளரான யோஷிஹிடே சுஹா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY