(Poem) இதனை மாற்றுவோம்! (காத்தான்குடி சகோதரர்கள் அவசியம் பாருங்கள்)

0
302

relation-ship-chinaஅறிந்தவர் வீட்டுக்கு
அடிக்கடி செல்ல
அவளுக்கும் ஆசைதான்
ஆனாலும் கஷ்டம்.

ஆகக் குறைந்தது
ஐநூறு ரூபாக்கு
ஏதாவது வாங்கி
எடுத்துச் செல்லாட்டி
தன்னைப் பற்றி
என்ன நினைப்பாங்க.

ஆனால் அப்பணம்
அதற்குக் கொடுத்து
ஆட்டோக்கும் கொடுத்து
அங்கு சென்றால்
வீட்டுச் செலவில்
மாட்டி முழிக்கணும்.

போதாக் குறைக்கு
போகின்ற வீட்டாரும்
சமுசா பழம் என்று
சாமான் வாங்க
ஐநூறு நோட்டு
அங்கும் பறக்கும்.

இதனால் பலபேர்
எங்கும் செல்லாமல்
பல நாள் இருக்க
பழகிய உறவுகள்
விலகிச் செல்வது
வேதனைக்குரியது.

கொண்டு போவதும்
நன்றாய் வைப்பதும்
நின்று போனால்தான்
சென்று வருவதும்
சிநேகம் கொள்வதும்
சங்கடமின்றி
சகஜமாய்த் தொடரும்.

இதனைச் சொன்னால்
இஸ்லாம் பேசுவோர்
அன்பளிப்பு மார்க்கத்தில்
அவசியம் என்பார்.

நெஞ்சைத் தொட்டு
நேர்மையாய் சொல்லுங்கள்
ஊரில் இப்போ
உள்ள நடைமுறை
மார்க்கத்துக்காகவா?
மனிதருக்காகவா?

மல்வான போன்ற
மற்ற ஊர்களில்
இந்தப் பிரச்சினை
இல்லாத நிலையில்
அடுத்தவர் வீட்டுக்கு
அடிக்கடி செல்வர்.

செல்லும் போது
சிறு பிள்ளை இருந்தால்
சிறிய இனிப்பொன்றை
செல்லமாய்க் கொடுப்பர்.
வாசலில் அன்புடன்
வந்த உறவுக்கு
வீட்டில் உள்ளதை
விரும்பிக் கொடுப்பர்.

இந்த முறையினை
இங்கும் தொடர்ந்தால்
காசு பணம் இன்றியே
நேசம் வளர்க்கலாம்.

(Mohamed Nizous)

LEAVE A REPLY