இலங்கை-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த உடன்பாடு

0
253

ஐக்கிய நாடுகள் சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கி வந்த ஒத்துழைப்பும், ஆதரவையும் இலங்கை ஜனாதிபதி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்ககை சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கான பாராட்டுக் கூட்டம் ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன இதைத் தெரிவித்தார்.

இதையடுத்து, இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பாகிஸ்தான் இலங்கை இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் எனத் தான் நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையே கூடுதல் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் தற்போது அதிகம் கவனம் செலுத்தப்படுவதாக பாகிஸ்தானியப் பிரதமர் அந்தக் கூட்டத்தில் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். அப்போது விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இப்போது நவாஸ் ஷெரீஃப் கொழும்பு வந்துள்ளார்.

LEAVE A REPLY