ஒருநாள் தொடரும் நியூசிலாந்துக்கே…

0
397

during game five of the One Day International series between New Zealand and Sri Lanka at Bay Oval on January 5, 2016 in Mount Maunganui, New Zealand.

இலங்கை அணிக்கெதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முனைப்புடன் ஒருநாள் தொடரில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதனையும் 3-1 என கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

இத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், முக்கியமானது இறுதியுமான 5 ஆவது போட்டி இன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் குப்தில் 102 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் மற்றும் டெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர 3 விக்கெட்டுகளையும் பிரதீப் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

during game five of the One Day International series between New Zealand and Sri Lanka at Bay Oval on January 5, 2016 in Mount Maunganui, New Zealand.

இந்நிலையில் 295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுக்க இலங்கை அணி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரை நியூசிலாந்திடம் 3-1 என பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெத்தியுஸ் 95 ஓட்டங்களையும் சந்திமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டுகளையும் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-1 என கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY