வசீம் தாஜூடீன் மரணம்: CCTV காட்சிகளை ஆராய சர்வதேச உதவியை நாடுமாறு பரிந்துரை

0
334

CCTV காட்சிப் பதிவுகளின் பிரகாரம் ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் வாகனம் மற்றும் ஸ்தலத்தில் உள்ள நபர்களை அடையாளம் காணமுடியாதுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட CCTV காட்சிப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர் கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு நிபுணர்களால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வசீம் தாஜுடீனின் வாகன இலக்கத்தகடு மற்றும் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தினுள் அவர் இருந்தாரா என்பதைக் கண்டறிய வெளிநாட்டு நிறுவனமொன்றின் உதவியை நாடுவது சிறந்ததாகும் என கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவின் நிபுணர்கள் கொழும்பு மேலதிக நீதவானிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வசீம் தாஜுடீனின் வாகன இலக்கத்தகடை அடையாளம் காண முடியவில்லை என்றும் அந்த வாகனத்தினுள் அவர் இருந்தாரா என்பது தொடர்பில் கண்டறிய முடியாதுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-NF-

LEAVE A REPLY