கொலஸ்ட்ராலை குறைக்கும் இஞ்சி தேன் டீ

0
445

தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது, அதுமட்டுமின்றி பட்டை விரைவில் ஜீரணமாக உதவுகிறது.

இஞ்சி மற்றும் பட்டை உடல் எடையை விரைவில் குறைக்கும், மேலும் உடல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.

செய்வது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பட்டையை போட்டு கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து டீ இலைகளை சேர்க்கவும், அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால் சுவையான டீ தயார்.

LEAVE A REPLY