முதற்தடவையாக மட்டு – ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை

0
325

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்குமாறு கல்குடா மீடியா போரம் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டையை கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வழங்கியுள்ளது.

குறித்த இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை முதற்கட்டமாக கல்குடா மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் நான்கு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டையை வைத்துள்ள ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

ஊடக நிறுவனங்களில் பிராந்திய ஊடகவியலாளர்களாக,செய்தியாளர்களாக கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டையை பெற விரும்பினால் கல்குடா மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ் 0778327822 அதன் செயலாளர் ஊடகவியலாளர் பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான் 0776033330 ஆகியோருக்கு தொடர்பு கொள்ள முடியும்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

LEAVE A REPLY