அரசாங்க அதிபரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

0
282

மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஒரு தொகுதி பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் அவர்களால் திங்களன்று வழங்கிவைக்கப்பட்டது.

மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினர் அரசாங்க அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, அந்தச் சங்கத்தின் 21 குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கான கல்வி உபகரணங்கள் சங்கத்தின் தலைவி மற்றும் பொருளாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான அனுசரணையினை மட்டக்களப்பு லெடர் ஒப் ஹோப் (டுயனனநச ழுக ர்ழிந) நிறுவனம் வழங்கியிருந்தது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தொழில் துறைத் திணைக்கள வளாகத்தில் இயங்கும் இந்த கூட்டுறவுச் சங்கம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் பெண்களை அங்கத்தவர்களாகக் கொண்டதாகும்.

(அப்துல்லாஹ்)

LEAVE A REPLY