மட்டக்களப்பு டச்பார் கடலில் நீராடிய இளைஞன் பலி

0
214

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் கடலில் நீராடிய இளைஞன், மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி கடலில் நேற்று (03) ஞாயிறன்று குடும்பத்தாருடன் பொழுது போக்கிற்காக வருகைதந்த பனிச்சையடியை சேர்ந்த 25 வயதுடைய ஜுலியன் வின்சன்ற் எல்மர் என்பவரே இவ்வாறாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடலில் மூழ்கி காணாமல் போனவரை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் பிரதேச வாசிகள் தேடிக் கண்டு பிடித்து கரை சேர்த்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்லாஹ்)

LEAVE A REPLY