ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக சவுதி அறிவிப்பு!

0
305

ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதியின் வெளிவுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபெயிர் அறிவித்துள்ளார்.

முன்னதாக சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சவுதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதியின் வெளிவுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபெயிர் தெரிவித்துள்ளார்.

மேலும், சவுதியில் இருக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் அடுத்த 48 மணிநேரத்தில் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY