வில்பத்து, முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு முற்றுப்புள்ளி

0
313

ஆனந்த சாகர தேரருடன் நடத்திய விவாதத்துக்குப் பின்னர் வில்பத்து விவகாரம் தொடர்பிலும் முஸ்லிம்கள் பற்றியும் சிங்கள மக்களின் ஒரு சாராருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த பிழையான எண்ணங்களும் தப்பப்பிராயங்களும் நீக்கப்பட்டிருப்பதாக வட கிழக்குக்கான சங்க நாயக தேரர் சியம்பலகஸ்வெவ விமல சார தேரர் சனிக்கிழமை மாலை தெரிவித்தார்.

வவுனியா பௌத்த விகாரையில் அமைச்சருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தின் போதே சங்க நாயக்க தேரர் இவ்வாறான கருத்தை வெளியிட்டார்.

ஹிரு தொலைக்காட்சியில் ஆனந்த சாகர தேரர் அமைச்சருடன் நடத்திய விவாதம் வில்பத்து தொடர்பான சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர உதவியுள்ளது. பாமர சிங்கள மக்கள் மத்தியில் வில்பத்து தொடர்பில் பிழையான கருத்துக்களை உருவாக்கி அந்த மக்களை முஸ்லிம் மக்கள் மீது திசை திருப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

பௌத்த மதத்தின் மத குரு ஒருவருடன் மிகவும் கௌரவமான முறையில் நடந்து கொண்டு வில்பத்து தொடர்பில் ஆதாரபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இலங்கை மக்கள் அனைவருக்கும் தனதும் தன் சமூகத்தினதும் உண்மைத்தன்மையை அவர் நிரூபித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆனந்த சாகர தேரர் அமைச்சரை ஆவேசப்படுத்த முயற்சித்த போதும் அமைச்சர் அமைதி இழக்கவில்லை.

அமைச்சரை ஆத்திரமூட்டி விவாதத்தை திசை திருப்ப முடியும் என்று தேரர் தீட்டிய திட்டம் பலிக்கவில்லை. சிங்கள மொழியில் அதிக அளவில் அமைச்சர் தேர்ச்சி பெற்றிராத போதும் தான் சொல்ல நினைத்ததை மிகவும் அழகான முறையில் எடுத்துக் கூறினார்.

என்னைப்பொறுத்த வரையில் நான் இரவில் நேரத்துக்கு தூங்க செல்லுபவன். அமைச்சர் இந்த விவாதத்தை மிகவும் பெறுமதியாக்கி அதனை தொடர்ந்தும் பார்க்கும் வகையில் உண்மைகளை எடுத்துக்கூறினார்.

அதனால் அவரின் திறமையைக்கண்டு நான் வியந்தேன். அத்துடன் என்னைப்போல் பல தேரர்கள் இந்த விவாதத்தை பார்த்து தாங்கள் இப்போது வில்பத்துவின் உண்மை நிலையை புரிந்து கொண்டதாக தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா சிங்கள கிராம மக்களுக்கும் விகாரைகளுக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் பணிகளையும், உதவிகளையும் அவர் மீது வீணான பழி சுமத்தும் தேரர்கள் வவுனியா வந்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என சங்க நாயக்க தேரர் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY