முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி படுகாயம்

0
361

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை படை முகாமுக்கு அருகில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி சாலைக்குச் சொந்தமான பஸ்ஸும் கொம்மாதுறையிலிருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்தது.

மாடொன்று வீதிக்குக் குறுக்கே சென்றபோதுதான் இந்த விபத்து சம்பவித்ததாகத் தெரியவந்துள்ளது.

இதில் முச்சக்கர வண்டி நொருங்கியுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற ஏறாவூர் குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கே. மைல்வாகனம் (வயது 64) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(அப்துல்லாஹ்)

a b c SLTB Bus

LEAVE A REPLY