(Photos) வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி மரணம்

0
171

வீடு இடிப்பதில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலையில் தொழிலாளர் நால்வர் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இவ்வேளையில் தொழிலாளியான ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ். சேகர் (வயது 52) என்பவர் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது.

அதனால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

பொலிஸார் மேலதி விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(அப்துல்லாஹ்)

00002_20160103-12092214 00002_20160103-12105162 00005_20160103-12130837 DSC00252 DSC00253 DSC00255

LEAVE A REPLY