85 பேர் இரத்தத்தை தானமாக வழங்கிய மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

0
400

DSC_0174காத்தான்குடியில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பின் 6 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் எம்.ஏ. இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இம் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமில் சமூக நலன் பேணும் அமைப்பின் உப தலைவர் டாக்டர் அஹமட் சியாம் உட்பட ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், இளைஞர் யுவதிகள், சமூக நலன் பேணும் அமைப்பின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் மற்றும் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் நலின் ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இங்கு சுமார் 85 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.

இம் முகாமில் சமூக தொண்டர் சேவை பணிகளை காத்தான்குடி குபா இளைஞர் கழகம் வழங்கியிருந்தது.

குறித்த சமூக நலன் பேணும் அமைப்பு குறுகிய காலத்தில் சுகாதார ரீதியான சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2-DSC_0180 5-DSC_1853 6-DSC_1860 7-jpg 8-jpg 10-jpg

LEAVE A REPLY