கல்முனை சாஹிராவில் மாபெரும் சிரமதானம்!

0
378

“சுத்தமான பாடசாலையும் ஆரோக்கியமான மாணவர்களும்” எனும் தொனிப்பொருளில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் எதிர்வரும் 07.01.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாபெரும் சிரமதானமும் மர நடுகை நிகழ்வும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சிரமதானப் பணியினில் கல்முனை பிரதேசத்தில் இருக்கும் அனைத்து விளையாட்டு கழகங்கள் சமூக சேவை அமைப்புகள் உட்பட அனைத்து பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக இந்நிகழ்வுக்கு பிராந்திய சுகாதார திணைக்களம், கல்முனை மாநகர சபை, காரைதீவு ராணுவ படை முகாம், கல்முனை பொலிசார் மற்றும் சாய்ந்தமருது கல்முனை பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(கலீல் எஸ். முஹம்மத்)

LEAVE A REPLY