பாகிஸ்தான் அணியில் மீண்டும் முகமது அமீர்!

0
446

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரின் பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம்பெற்றுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய முகமது அமீருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது தடை நீங்கியுள்ள நிலையில், அணிக்கு திரும்பியுள்ள அமீர் நியூசிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான தொடர் வருகிற 15ம் திகதி தொடங்குகிறது.

இதுவரை 14 டெஸ்ட், 15 ஒருநாள் மட்டும் 18 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணி விபரம்(ஒருநாள் போட்டி): அசார் அலி(அணித்தலைவர்), அகமது ஷெசாத், ஹபீஸ், ஷோயப் மாலிக், ஆசாத் ஷபிக், பாபர் ஆஸம், ஷொயப் மக்ஸூத், ஸபர் கோஹர், இமாத் வாசிம், அன்வர் அலி, சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ், ரஹத் அலி, மொகமது இர்பான், மொகமது ரிஸ்வான், முகமது ஆமீர்.

LEAVE A REPLY