2015 ஆம் ஆண்டில் சுதந்திரம், ஜனநாயகம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணத்துடன் செயற்பட்ட நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்

0
73

2015 ஆம் ஆண்டில் சுதந்திரம், ஜனநாயகம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணத்துடன் செயற்பட்ட நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பேன் கீ மூன், ஒரு சர்வதேச மாநாட்டில் இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (01) பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பிறந்திருக்கும் புத்தாண்டில் பொலன்னறுவை வாழ் மக்களுக்கு ஜனாதிபதி தனது வழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை நாம் திரும்பிப் பார்க்கின்ற போது, இலங்கை மக்கள் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைக்கூடிய பல்வேறு வெற்றிகளை நாம் பெற்றுள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த எல்லா அரச தலைவர்களும் அந்தந்த காலப் பகுதியில் தமது யுகப் பணியை சிறப்பான முறையில் நிறைவேற்றியுள்ளதுடன், தமது ஆட்சிக்காலப் பகுதியில் தாய் நாட்டை உலகின் ஒரு சிரேஷ்ட தேசமாக கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சங்கைக்குரிய அத்துரலியே ரத்தனதேரர் உட்பட மகா சங்கத்தினர் சமயத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY