சீனாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
328

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர் ஆழத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 0.22 மணிக்கு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY