வறிய மாணவர்களுக்கு பாடசாலை அப்பியாசக் கொப்பிகள்

0
510

இம்போட்மிரர் ஊடகவலையமைப்பு மற்றும் அட்டாளைச்சேனை அந்நூர் சமூக நலன்புரி அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் மாபெரும் நிகழ்வு சென்ற 29ஆம் திகதி அட்டாளைச்சேனை அந்நூர் மஹா வித்தியாலய கேட்போர் கூடத்திலுல் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு தங்களின் சொந்த நிதிகளை வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் அவரின் சகோதரர் எஸ்.எல்.எம்.முஸம்மில் ஆகியோரின் முழுப்பங்களிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு அதிதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரின் ஆலோசகருமான தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ், அந்நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.கிதுறுமுகம்மட், சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.அமீன், ஆசிரியர்களான ஏ.முஸம்மில், எம்.ஹாறூன், அந்நூர் சமூக நலன் புரி அமைப்பின் நிருவாக உத்தியோகத்தர்கள், செய்தி ஆசிரியர்களான பி.சப்னி அஹமட், என்.றிஸ்லி சம்ஷாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரு நூறுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இவ் அப்பியாசக்கொப்பிகள் போன்று கடந்த பல வருடங்களாக தொடர்ந்து எஸ்.எல்.முனாஸ் மற்றும் அவரின் சகோதரர் எஸ்.எல்.எம்.முஸம்மில் ஆகியோரின் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றமையும் தமிழ், முஸ்லிம் மாணவர்களில் வருமானம் குறைந்த குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மானவர்களுக்கு இது வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று 01 திருகோணமலை வறிய மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கியவைக்கும் நிகழ்வு ஹலீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

(சப்னி)

12434640_1785355448354351_193649001_n 12434690_1785355435021019_1651031999_n 12435709_1785355558354340_1110664071_n 12463521_1785355685020994_1717112146_n 12467874_1786370271586202_358729208_n 12483344_1786370138252882_821073634_n

LEAVE A REPLY