கல்கிசையில் தீ விபத்து

0
408

கல்கிசை – ஷாந்த மெரியம் வீதி பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில், குறித்த கட்டடத்தின் களஞ்சிய சாலையில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.

மேலும் இந்தத் தீயினால் உயிரிழப்புக்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண)

LEAVE A REPLY