பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

0
411

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் இராணுவ சீருடையுடன் நுழைந்து தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 2 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள பதான்கோட் விமானபடை தளத்தில் இன்று அதிகாலை 4 தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுத்த விமானப் படையினர் 2 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா எனவும் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து இராணுவ நிலைகளும் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இதேபோல் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் மொத்தம் 7 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY