கடந்த வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 2,800 முறைப்பாடுகள்

0
97

கடந்த வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 2,800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

தமது பெயர்களில் வேறு நபர்கள் போலியான கணக்குகளை வைத்திருப்பதாக தமக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து பேஸ்புக் இணையத்தளத்திற்கு நேரடியாக முறைப்பாடுகளை தெரிவிப்பதன் மூலம், உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

அறிமுகமில்லாத நபர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக இணைத்துக்கொள்வதை தவிர்க்குமாறும் அவர் அறவுரை விடுத்துள்ளார்.

011 2691692 / 011 2679888 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அல்லது,

011 2691 064 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அறிவிப்பதன் மூலமும் அல்லது,
sl cert @ cert dot gov dot lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

LEAVE A REPLY