செங்கலடிப் பிரதேச செயலகத்தில் புத்தாண்டு சத்தியப் பிரமாணத்துடன் பணிகள் ஆரம்பம்

0
666

அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலகத்தில் புத்தாண்டு சத்தியப் பிரமாணத்துடன் பணிகள் ஆரம்பமானது.

சத்தியப் பிரமாண உறுதியுரையுடன் பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்பமாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படதுடன் இறைவணக்கத்தின் பின்னர் அரச சேவை சத்தியப்பிரமாண உறுதியுரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் பங்குபற்றி உறுதியுரை எடுத்துக் கொண்டனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

00047_20160101-14102413 00047_20160101-14120841 00048_20160101-14143747 00049_20160101-14171182 00050_20160101-14175687 DS Office Chenkalady

LEAVE A REPLY