வறிய பெற்றோரை இழந்த மற்றும் விஷேட தேவையுடைய தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு

0
467

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 35வது சமூகத்தை நோக்கிய பயணத்தில் வறிய பெற்றோரை இழந்த மற்றும் விஷேட தேவையுடைய தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வை தலைமையில் இடம்பெற்ற மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்க மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் முதன்மை அதிதியாக பீகாஸ் கெம்பஸின்; பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மானும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் வறிய பெற்றோரை இழந்த மற்றும் விஷேட தேவையுடைய தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டதுடன் குறித்த விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற கவிஞர்களுக்கு பணப் பரிசும், ஏனைய ஏழு கவிஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு விழா அரங்கில் நடாத்தப்பட்ட வினா விடைப் போட்டியில் வெற்றியீட்டிய 15 பேருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கவிதைகள் விமர்சனத்தை பன்னூல் ஆசிரியர் எம்.எம். மஹ்றூப் கரீம் நிகழ்த்தியதோடு வினாவிடைப் போட்டியை ஓய்வு பெற்ற கல்வி நிருவாக உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் தலைமை ஏற்று நடாத்தினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி எம்.ஏ.அப்துல் காதர் பலாஹி, மத்தியஸ்தர் சபைத் தலைவர் எம். ஐ. உஸனார், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொருளாளர் எம்.எம்.எம். தாஹிர், அதன் உறுப்பினர் மௌலவி பைறூஸ் பலாஹி, உப தலைவர் எம்.ஐ.நஸார் உற்பட மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இவ் அமைப்பு சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்காக தொடர்சியாக ஆக்க பூர்வமான சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருவது என்பதுடன் இந் நிகழ்வு இவ் அமைப்பின் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இடம் பெறும் 35வது உதவி வழங்கும் நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2-DSC_9835 4-DSC_9840 5-DSC_9814 DSC_9819

LEAVE A REPLY