(Photos & Video) புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்: துபாய் அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து

0
627

Dubai hotel fire 3துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் துபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில் உள்ள உலக அளவில் பெரிய கட்டிடம் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 20-வது மாடியின் வெளிப்புறத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேலிருந்து கீழ் வரை தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்தது.

விபத்தில் 14 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தரிவிக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டிற்கு முன்பாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒருபக்கம் கட்டடம் தீபற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில் மற்றொரு அடுக்கு மாடி கட்டடத்தில் வான வேடிக்கையுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. சோதனைகள் வந்தும்கூட மனிதன் திருந்தியதாக தெரியவில்லை.

A fire engulfs The Address Hotel in downtown Dubai in the United Arab Emirates December 31, 2015. REUTERS/Ahmed Jadallah      TPX IMAGES OF THE DAY

Dubai hotel fire 2 Dubai hotel fire 4 Dubai hotel fire 5 Dubai hotel fire

LEAVE A REPLY